புகழுக்காக வாழாதே
பொறுமையுடன் வாழ்
கர்ணனைப் போல் வாழ வேண்டாம்
கருணையுடன் வாழ்
பசித்தவனைப் பார்த்து புசிக்காதே
ஈந்து மகிழ்ந்து வாழ்
சமமாக வாழச் செய்ய இயலாது
சமமாக மதித்து வாழ்
காலங்கள் மாறலாம்
கற்க கசடற வாழ்
சோர்வடைந்தவனுக்கு அறிவுரை தேவையில்லை
கைப்பற்றி தூக்கி வாழ்
ஒப்பிட்டு வாழத் தேவையில்லை
ஒப்புரவுடன் வாழ்
© 2025 Vivekananda Educational Trust (VET) – All Rights Reserved