திருக்குறள், கதை, தமிழ் மொழி – A. Sumathi Mentor, SRF

  • Home
  • திருக்குறள், கதை, தமிழ் மொழி – A. Sumathi Mentor, SRF
Shape1 Shape2 Shape3 Shape4 Shape5 Shape6 Shape7 Shape8 Shape9 Shape10
திருக்குறள், கதை, தமிழ் மொழி – A. Sumathi Mentor, SRF

திருக்குறள்

உலகப் பொது மறை திருக்குறளாம் 

முப்பால் தந்திட்ட திருக்குறளாம்

வாழ்க்கையின் உண்மையை

 உரைக்கும் திருக்குறளாம்

உலகம் போற்றும் திருக்குறளாம்

வள்ளுவர் தந்த திருக்குறளாம்

நெஞ்சம் மகிழ்ந்திடும்  திருக்குறளாம்

தெய்வப் புலவர் தந்த திருக்குறளாம் 

பாரதம் போற்றும் திருக்குறளாம்

கதை

பாப்பா  பாப்பா கதை கேளு 

அன்பாய் நீயும் கதை கேளு 

அறிவாய் நடக்க கதைகேளு 

பண்பை வளர்க்க கதை கேளு 

வாதம் வம்பு அழிக்க கதை கேளு 

நேர் வழியில் நடக்க கதை கேளு 

நீதியைக்  கற்று  நீ  வளர

 நித்தம் ஒரு கதை கேளு

தமிழ் மொழி

தாய்மொழியாம் தமிழ் மொழி 

முக்கனிச்சுவை கொண்ட மொழி

மூவேந்தர் ஆண்ட மொழி 

வள்ளுவர் தந்த பொதுமறை மொழி 

முப்பால் தந்த அருமை மொழி 

பெருமை சேர்த்த செம்மொழி 

அற்புத மொழியை வளர்த்திடுவோம் 

அன்னை மொழியைக் காத்திடுவோம்!

A. Sumathi Mentor

SRF