ஆதிசேஷனும் சேஷாத்தலத்தின் தெய்வீக மரபும் – S. Rani Mentor, TNR

  • Home
  • ஆதிசேஷனும் சேஷாத்தலத்தின் தெய்வீக மரபும் – S. Rani Mentor, TNR
Shape1 Shape2 Shape3 Shape4 Shape5 Shape6 Shape7 Shape8 Shape9 Shape10
ஆதிசேஷனும் சேஷாத்தலத்தின் தெய்வீக மரபும் – S. Rani Mentor, TNR

ஆதிசேஷனும் சேஷாத்தலத்தின் தெய்வீக மரபும்

  • ஆதிசேஷன், ஏழு தலைகளை உடைய ஆதிப் பாம்பாகக் கருதப்படுகிறார். அவனின் ஏழு தலைகளை குறிக்கும் வகையில் ஏழு சிகரங்களை கொண்ட திருப்பதி மலை அமைந்துள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாத்தலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆதிசேஷனின் தெய்வீக அடையாளமாக விளங்குகிறது.

    நாராயணன் இராமனாக அவதரித்த காலத்தில், ஆதிசேஷன் இலக்குவனாக உடன்பிறந்தவனாக தோன்றினார். இராமாவதாரத்தின் இறுதிக் காலத்தில், காலாந்தகனைச் சந்திக்கும் தருணம் நெருங்கியபோது, எவரையும் தன்னைச் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என இராமபிரான் தனது தம்பியான இலக்குவனிடம் அறிவுறுத்தினார்.

    அவ்வேளையில் துர்வாச மாமுனிவர் அங்கு வர, இராமபிரானின் கட்டளையை மதித்து இலக்குவன் அவரை உள்ளே அனுமதிக்க தயங்கினார். இதனால் கோபமடைந்த துர்வாசர், இலக்குவனை புளியமரமாக பிறப்பெடுக்கும்படி சபித்தார். அதன்படி, ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தில் இலக்குவன் புளியமரமாக உருவெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    இலக்குவனின் வேண்டுகோளுக்கு இணங்க, இராமபிரான் பின்னாளில் நம்மாழ்வாராக அவதரித்து, அந்த புளியமரத்தடியில் காட்சியளித்ததாகவும், இலக்குவனுக்கு திரும்பிவரும் அருள்காட்சி அளித்ததாகவும் நம்பப்படுகிறது. இதனால் அந்தத் திருத்தலம் சேஷ சத்திரம் எனவும் புகழ்பெற்று விளங்குகிறது.

    இந்த நிகழ்வுகள் ஆதிசேஷனின் தியாகம், கடமை உணர்வு மற்றும் பக்தியின் மேன்மையை எடுத்துரைக்கும் தெய்வீக வரலாறாக இன்றும் போற்றப்படுகின்றன.

S. Rani Mentor

TNR