
FestiVETies
ஒரு நாள் மாலைப்பொழுது நான் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் வீட்டில் வேலை செய்யும் அம்மா என்னிடம் தயக்கமாக வந்து கையிலிருந்த ஒரு உயர்தரமான இனிப்பைக் கொடுத்தார். நான் யோசித்துக் கொண்டே அதை வாங்கினேன். என்ன இன்றைக்கு இனிப்பெல்லாம் கொடுக்கிறீர்கள் என்று வியந்து கேட்டேன். அதற்கு அவர்கள் இன்று என்னுடைய பிறந்தநாள் என்று சொன்னார்கள். எனக்காக எல்லா தேவைகளையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அவர்களை பற்றி நான் யோசிக்கவே இல்லையே என்ற உணர்வு அப்பொழுது ஏற்பட்டது.
நான் அன்று மாலையே அவர்களுக்கு அழகான ஒரு புடவை வாங்கிக் கொடுத்தேன். நான் கொடுத்த பரிசைப் பார்த்தவுடன் அவர்களுக்கு எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. அதை பார்த்த எனக்கு உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த உணர்வைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
எதற்காக இந்த நிகழ்வைக் கூறினேன் என்றால் நாம் நம் மகிழ்ச்சியை நம்மை சுற்றி இருப்பவர்களுடனும் நமக்காக பாடுபடுபவர்களுடனும்; பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான பதிவு. இந்தப் பதிவை நினைவில் வைத்துக் கொள்வோம் இதற்கு முதல்படியாக நமது விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் சார்பாக ‘FestiVETies’ என்ற நிகழ்வின் மூலம் பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தங்களுடைய சேவை மனப்பான்மையை வெளிக்கொணர வழி வகுத்துள்ளோம்.
இதன் நோக்கம் என்னவென்றால் நம்முடைய மாணவர்கள் சிறந்த நல்லொழுக்கத்துடன் வளர அவர்களுடைய சேவை மனப்பான்மை மேம்பட பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் இணைந்து நம்மை சார்ந்து இருப்பவர்களுடன் நாம் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.!